கோவை – தேனி மாவட்டத்தில் கனமழை தொடரும்… சென்னை வானிலை மையம் தகவல்…
தென்மேற்கு பருவமழைக் காரணமாக கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த நான்கு நாட்களுக்கு மேற்கு தொடரச்சிமலையோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், ஜூலை 28, 29 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சோலையாறு 9 செ.மீ. மழையும், சின்னக்கல்லார் 7 செ.மீ. மழையும், வால்பாறை 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
