தமிழ்நாடு

தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் ..!

தமிழகத்தில் புதிதாக 1,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :

தமிழகம் முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,872 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 43 ஆயிரத்து 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 475 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 83 ஆயிரத்து 676 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளது.