தமிழகத்தில் குட்கா இல்லை என்ற நிலையை ஓரிரு மாதங்களில் உருவாக்கியே தீர வேண்டும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் குட்கா இல்லை என்ற நிலையை ஓரிரு மாதங்களில் உருவாக்கியே தீர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர் கூறியதாவது :
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் குட்கா விற்பனையைத் தடுப்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்பது உண்மை தான். கொரோனா தடுப்புப் பணியில் தான் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை முதல் அனைத்து கடைகளையும் சோதனை செய்ய வேண்டும் என்றும் எந்த கடைகளில் குட்கா விற்கப்படுகிறதோ அந்தக் கடைகளை உடனடியாக சீல் வைக்க வேண்டும் என்று கூறினார் .
தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் குட்கா இல்லை என்ற நிலையை உருவாக்கியே தீர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார் .
