சினிமா

திருமணம் போன்று விவாகரத்தும் புனிதமானதுதான்… பிரபல நடிகை பேட்டி…

திருமண வாழ்வில் தாங்க முடியாத பிரச்சனை வரும்போது விவாகரத்து செய்து கொள்வது உயிர்களை மாய்க்காத ஒரு வழியாகும் என்றும் திருமணம் போன்று விவாகரத்தும் புனிதமானதுதான் என்று நடிகை சுவாசிகா கூறியுள்ளார்.

தமிழில் கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, சோக்காலி, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சுவாசிகா. தற்போது இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பல இளம் பெண்கள், திருமண வாழ்வை முடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சரிசெய்ய முடியாத அளவில் திருமண உறவு கை மீறி போனால் விவாகரத்து பற்றி யோசிப்பேன் என்ற நடிகை சுவாசிகா கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமண வாழ்க்கையில் கஷ்டங்களைச் சந்திக்கும் பெண்கள், சமூகம் என்ன நினைக்குமோ என்ற பயம், குடும்பம் போன்ற பல காரணங்களால் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதாக கூறினார். நான் திருமணம் செய்து கொள்ளும்போது பிரச்சனை ஏற்பட்டால், அதை முடிந்த வரை தீர்க்க முயற்சி செய்வேன் என்றும் நிலைமை கைமீறி போனால் விவாகரத்து பற்றியோசிப்பேன் என்றம் சுவாசிகா கூறியுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வது பயங்கரமானது. இரண்டு பேர் மகிழ்ச்சியோடு வாழ திருமணம் செய்து கொள்கின்றனர். தாங்க முடியாத பிரச்சனைகள் வரும்போது விவாகரத்து செய்து கொள்வது உயிர்களை மாய்க்காத ஒரு வழியாகும் என்றார். பெண்கள் தங்களை மோசமாக நடத்த திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரச்சனைகள் வரும்போது சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் நடிகை சுவாசிகா கூறினார்.