மருத்துவமனையில் மதுசூதனன்… “ஒரே நேரத்தில் வந்த சசிகலா – ஈ.பி.எஸ்”… பரபரப்பு…!
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், அதிமுக அவை தலைவர் மதுசூதனன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், மதுசூதனின் உடல்நலன் குறித்து விசாரிக்க, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து, மதுசூதனின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது, அதிமுக கட்சி கொடியுடன், அப்பல்லோ மருத்துவமனைக்கு சசிகலா வந்ததால், உடனடியாக எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதன் பின்னர் மருத்துவர் மற்றும் மதுசூதனின் குடும்பத்தினரை சந்தித்த சசிகலா, மதுசூதனின் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகமீது பற்று கொண்ட மதுசூதனன், விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுசூதனின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்த சசிகலா வந்த காரில் அதிமுக கொடி கட்டியிருந்தார்.
