அரசியல்தமிழ்நாடு

ஆக்சிஜன் வசதியுடன் 10,000 படுக்கைகள் குழந்தைகளுக்காக தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி பற்றி வெள்ளை அறிக்கை கேட்கும் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி ஆட்சியில், குழந்தைகளுக்கான திட்டம் தொடங்கப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாசுப்பிரமணியன், 10 ஆயிரம் படுக்கைகள் குழந்தைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் தயாராக உள்ளது என்றார்.

ஆன்மீக தளங்கள் உள்ள இடங்களில் ஜூலை இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்றம் தடுப்பூசி சட்டத்தின் மூலம் நியூமோகோகல் நடைமுறைக்கு வந்ததாக தெரிவித்தார். ஆனால் இதை அதிமுக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மூளை காய்ச்சல், நிமோனியா வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி திட்டத்தை அதிமுக அரசு தொடங்கவில்லை என்றும் கூறினார்.

இந்தியாவில் 21 மாநிலங்களில் நிமோனியா எதிர்ப்பு தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 21 மாநிலங்களில் தொடங்கிய பிறகும், இரண்டு ஆண்டுகளாக நியூமோகோகல் தடுப்பூசி திட்டத்தை அதிமுக அரசு தொடங்கவில்லை. தடுப்பூசி பற்றிய வெள்ளை அறிக்கை கேட்கும் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி ஆட்சியில் குழந்தைகளுக்கான திட்டம் தொடங்கப்படவில்லை என்றார். மூளைக்காய்ச்சல் நிமோனியாவை தடுக்கும் நியூமோகோகல் தடுப்பூசி வெளிச்சந்தையில் 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குழந்தைகளுக்கு ஒன்றரை மாதத்தில் ஒரு ஊசி, மூன்றே மாதத்தில் அடுத்த ஊசி ஒன்பதாவது மாதத்தில் கடைசி ஊசி போட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி திட்டப்படி இலவசமாக நியூமோகோகல் ஊசி போடப்படும். தனியார் மருத்துவமனையில் போடுவதாக இருந்தால் ஒரு குழந்தைக்கு 12 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும் என்றார். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நிமோனியா மூளைக்காய்ச்சல் 12 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.