Covid19உலகம்விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி..! இரண்டு தடகள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று பரவல் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது .

கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் வைரஸ் தொற்று காரணமாக தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையென்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் இருந்து போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள் டோக்கியோவின் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கிராமத்தில் ஏற்கெனவே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு தடகள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

டோக்கியோவில் ஏற்கெனவே அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.