ஜூலை 19 ஆம் தேதி 12-ம் தேர்வு முடிவுகள் வெளியீடு… பள்ளி கல்வி துறை அறிவிப்பு…
12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசு தேர்வு இயக்குநகரம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள், 19.7.2021 அன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை, .http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். மேலும், பள்ளி மாணவர்கள் 22.7.2021 அன்று காலை 11 மணி முதல் என்ற இணைய தளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

