அரசியல்இந்தியா

மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை, 11 ஆக அதிகரிப்பு..!

மத்திய அமைச்சரவையில், கேபினட் அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர்களாக, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் என, நான்கு பெண் அமைச்சர்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், மீனாட்சி லேகி, ஷோபா கரன்ட்லஜே, அனுப்பிரியா சிங் படேல், தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், அன்னப்பூர்ணா தேவி, பிரதிமா பவுமிக், டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் அப்னா தளத்தை சேர்ந்த அனுப்பிரியா சிங் படேல் என, ஏழு பெண் அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்தது. நேற்று பதவியேற்ற ஏழு பெண் அமைச்சர்களும், இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில், அன்னப்பூர்ணா தேவி, பாரதி பிரவீன் பவார், பிரதிமா பவுமிக் ஆகியோர், முதல் முறை எம்.பி.,க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.