இந்தியா

மத்திய அமைச்சராக எல்.முருகன் பதவியேற்பு…

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சரவையில் தமிக பாஜக தலைவராக உள்ள எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாஜக தேசிய மகளிர் அணி தலைவரான வானதி சினிவாசன் உள்ளிட்ட பல பாஜக தலைவர்களும், எல்.முருகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இளம் வயது அமைச்சரானவர்களில் எல்.முருகனும் ஒருவர். எல். முருகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக பதவி வகித்து வந்த நிலையில் அவருக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவில், எல்.முருகன் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.