சினிமா

நடிகை ஷனம் ஷெட்டிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய கல்லூரி மாணவன் கைது…

நடிகை ஷனம் ஷெட்டிக்கு சமூக வலைத்தளங்களில் ஆபாச மெசேஜ் மற்றும் புகைப்படங்களை அனுப்பிய கல்லூரி மாணவரை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஷனம்ஷெட்டி. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷனம் ஷெட்டி, தனது புகைப்படங்களை இன்ஷ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரை ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், இவரது வாட்ஸ் ஆப் மற்றும்இன்ஸ்டாகிராமிற்கு, அடையாளம் தெரியாத ஒருவர், தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளார். இது குறித்து நடிகை ஷனம் ஷெட்டி, போலீசில் புகார் அளித்தார். குறிப்பிட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அடையாறு சைபர் க்ரைம் பிரிவில் அவர் புகார் தெரிவித்திருந்தார்.

நடிகை ஷனம் ஷெட்டியின் புகாரை பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான் பால் (21) என்பவரை அடையாறு சைபர்பிரிவு போலீசார் கைது செய்தனர். திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.