குடிசைமாற்று வாரியத்தில் முறைகேடு… விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல்…
குடிசைமாற்று வாரியத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1970 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தமிழகத்தில் குடிசையே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குடிசைமாற்று வாரியம் ஆரம்பிக்கப்பட்டது என்றும் 70 ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக சென்னையில் குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டு ஏழைகளுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த கட்டடங்கள் தற்போது 45 வருடங்கள் ஆன நிலையில், தற்போது வசிக்க முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலினிடம் கூறியுள்ளதாகவும், அந்த வீடுகளை இடித்துவிட்டு, புதிதாக குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு, அங்கு குடியிருந்தவர்களே மீண்டும் குடியமர்த்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அதற்கான பணிகன் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
தற்போது கட்டப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் 420 சது அடியில் கட்டப்பட உள்ளதாகவும், 3 மாடி கட்டிடங்கள் தற்போது 4 – 5 என அதிகப்படுத்த உள்ளதாகவும் கூறினார். பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்யப்படாதவர்கள் உள்ளதாகவும் அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
ஒதுக்கீடு செய்யப்படாதவர்கள் தற்போது அரசு குடியிருப்புகளில் உள்ளதாகவும் அது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், ஒதுக்கீடு செய்யப்படாதவர்கள் குடியிருக்கும் பட்சத்தில் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுததப்பட்டு, உரியவர்கள் தங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
