சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை: டி.ஜி.பி. சைலேந்திரபாபு
சட்டம் – ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து பரப்புபவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அலுவலகம் சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கட்சி, சாதி, மதம் சார்ந்தும், இரு தரப்பினரிடையே மோதல்களைத் தூண்டும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் இத்தகைய சட்ட நடவடிக்கைகள் காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களைப் பதிவு செய்தவர்கள் மீது தமிகம் முழுவதும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்தாகவும், இந்த வழக்குகளில் எல்லை மீறிய வகையில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்த 16 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும், சட்டம் – ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் உரிய முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே போலீசார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்தி குறிப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது.
