Uncategorized

கத்திரிக்கோல் வழங்க தாமதமானதால் ரிப்பனை கையாலேயே கிழித்த முதலமைச்சர்…

அரசு திட்டத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைப்பது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் கத்திரிக்கோல் எடுத்துவர தாமதமானதால் தெலங்கான முதலமைச்சர், ரிப்பனை கையால் கிழித்தெறிந்த சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானா அரசின் திட்டங்களில் ஒன்றான இரட்டை படுக்கையறை கொண்ட வீடு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றன. புதிதாக கட்டப்பட்ட வீடுகளை பயனாளர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிர்சிலாவில் நடைபெற்றது.

தெலங்கானா மாநிலம், சிர்சிலாவில், பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் கலந்து கொண்டார். ரிப்பனை வெட்டுவதற்கான கத்திரிக்கோலை வழங்க அதிகாரிகள் மறந்து விட்டனர். கத்தரிக்கோலை எடுத்து வருவதற்கு தாமதமான நிலையில், முதலமைச்சர் சந்திரசேகரராவ், ரிப்பனை வெறும் கைகளால் எடுத்துவிட்டு புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்குள் சென்றார்.

அரசு நிகழ்ச்சியில் ரிப்பனை கையால் கிழித்தெறிந்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தொடர்பான வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கத்திரிக்கோல் எடுத்து வருவதற்கு பொறுமை இழக்கலாமா? என்று நெட்டிசன்கள் பலவாறு விமர்சித்து வருகின்றனர்.