Uncategorized

“தொண்டர்களின் விருப்பம் ஒருபோதும் வீணாகாது”… நடிகர் குண்டு கல்யாணத்துடன் சசிகலா ஆடியோ பேச்சு…

அண்மை காலமாக அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா தொலைபேசியில் உரையாடி வருகிறார். இது தொடர்பான ஆடியோக்களும் வெளியாகி அரசியல் தளத்தில் பேசுபொருளாகி உள்ளது. தொண்டர்கள் மன வருத்தத்தில் இருப்பது புரிகிறது… விரைவில் நிர்வாகிகளைச் சந்திப்பேன்…. கட்சியை மீட்டெடுக்கலாம்… என்று சசிகலா தொலைபேசியில் உரையாடி வருகிறார்.

சசிகலாவின் ஆடியோ பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில், சசிகலா அதிமுகவில் இல்லை என்றும், அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதாக கூறியவர், அமமுக தொண்டர்களுடன் வேண்டுமானால் பேசியிருக்கலாம், அதிமுக தொண்டர்களுடன் பேசியிருக்க வாய்ப்பில்லை என் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே ஆடியோ வெளியிடுவதாகவும் அதிமுக தரப்பு சசிகலா மீது குற்றம் சாட்டுகிறது.

இந்த நிலையில், அதிமுக நட்சத்திர பேச்சாளருடன் தொலைபேசியில் உரையாடும் ஆடியோ வெளியாகி உள்ளது. நகைச்சுவை நடிகதும், அதிமுக தலைமைக்கழக பேச்சாளருமான குண்டுகல்யாணத்துடன், சசிகலா தொலைபேசியில் உரையாடி உள்ளார். அது தொடர்பான ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.

அந்த ஆடியோவில், உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகர் குண்டு கல்யாணத்திடம் உடல்நிலையை பர்த்துக்கொள்ளும்படி கூறினார். தேர்தலின்போது, உங்களுடைய பிரச்சாரம் கட்சிக்கு உபயோகமாக இருந்துள்ளது என்றும் அதைதான் மறக்கவில்லை என்றும் கூறினார். கட்சியை நல்லபடியாக கொண்டு வந்திரடலாம்… கவலைப்படாதீங்க என்றும் உங்கள் விருப்பம் எல்லாம் வீண்போகாது என்றும் சசிகலா ஆடியோவில் பேசியுள்ளார்.