விராட்கோலியின் ஒரு இன்ஸ்டா பதிவுக்கு இத்தனை கோடியா—
இன்ஸ்டாகிராமில் அதிக வருவாய் பெரும் இந்தியர்களில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட்கோலி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலி, அதிக வருமானம் பெறும் வீரர்களில் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால், இன்ஸ்டாவில் அவர் இடும் ஒரு பதிவிற்கு சுமார் 5 கோடி ரூபாய் வருவாய் பெறுகிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட்கோலி, தனது அதிரடி ஆட்டத்தால் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். கிரிக்கெட்டில் தொடர்ந்து முன்னணி வீரராக திகழும் அவர், விளம்பரங்கள், நிறுவன பங்கு என பல வகைகளில் கோடிகளை குவித்து வருகிறார்.
இந்த நிலையில், விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்கு கோடிகளில் வருவாய் பெற்று வருவது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. Hopper HQ என்ற தனியார் பத்திரிகை, இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ உள்ளார். இன்ஸ்டாகிராமில் ரொனால்டோவை 30 கோடிக்கும்மேல் பின் தொடரந்து வருகின்றனர். அவர் பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு சுமார் 12 கோடி ரூபாய் வருவாய் பெறுகிறார். இரண்டாவது இடத்தில் ஹாலிவுட் நடிகர் ராக் உள்ளார். இவர் இடும் ஒவ்வொரு பதிவிற்கும் 11 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.
இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி, 19 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 12 கோடியே 50 லட்சம் பின் தொடர்பவர்களைக் கொண்டுள்ள விராட்கோலி இடும் ஒவ்வொரு பதிவிற்கும், சுமார் 5 கோடி ரூபாய் வரை வருமானம் பெறுகிறார். இந்தியாவில் இன்ஸ்டாகிராம் மூலம் என்ற அதிக வருவாய் பெறும் பெருமையை விராட்கோலி பெற்றுள்ளார். 6.4 கோடி பின் தொடருபவர்களைக் கொண்டு, பட்டியலில் 27-வது இடத்தில் உள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் மூன்று கோடி ரூபாய் வருமானம் பெறுகிறார்.
