அதிமுக ஆட்சியில்தான் தரமற்ற விதைநெல் வழங்கப்பட்டுள்ளது… எதிர்கட்சி தலைவருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி…
திமுக அரசின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும், தரமான நெல்மணிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் டெல்டா விவசாயிகளுக்கு தரமான விதை நெல் வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டுக்கு வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர.கே. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விவசாயி கே.வீரமணி என்பவரின் நாற்றாங்காலில் நெல் விதைகள் முளைப்பு சிரயில்லை என்ற செய்தி வெளியான அன்றைய தினமே, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், வேளாண் இயக்குநர் மூலமாக விசாரணை நடத்தி, துறை மூலமாக தஞ்சாவீர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குந்ர, விதை ஆய்வு துணை இயக்குநர், தஞ்சாவூர், வேளாண்மை உதவி இயக்குநர், திருவையாறு மற்றும் உதவி வேளாண் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, அதன் பிறகு பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நடவு மேற்கொள்ள இலவசமாக நாற்று வழங்க அரசின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் உண்மைத்தன்மையை அறியாமல் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் விவசாயி என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒரு தரமான விதைநெல் உற்பத்தி செய்வதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று கூட தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார். விவசாயி கே.வீரமணிக்கு, அதிமுக அரசால் விநியோகம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த விவரங்கள் அறியாமல் அவசரகதியில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
