அரசியல்தமிழ்நாடு

ஹெச்.ராஜாவுக்கு எதிராக புகாரளித்தவர்கள் நீக்கம்… பாஜக அதிரடி நடவடிக்கை…

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். தனது தோல்விக்கு பாஜக நிர்வாகிகள்தான் காரணம் என்று ஹெச் ராஜா கூறியிருந்தார். இதையடுத்து, காரைக்குடி பாஜக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

மேலும், தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்ட பணத்தை ஹெச்.ராஜா செலவழிக்கவில்லை என்றும் அதில் வீடு கட்டுமான பணிகள் நடைபெறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். காரைக்குடி நகர பாஜக தலைவராக இருந்த சந்திரன், கடந்த மாதம் 22 ஆம் தேதி தனக்கும், தனது குடும்பத்தாருக்கும், ஹெச்.ராஜா தொடர்ந்து கொலை மிரட்டிடல் விடுத்து வருவதாக மாவட்ட தலைவரிடம் பல்வேறு குற்றச்சாட்டு புகார் கடிதம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஹெச்.ராஜா மீது குற்றம் சாட்டிய காரைக்குடி நகர தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டல தலைவர் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாஜக மாநில கட்சியின் பொது செயலாளர் கரு நாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மண்டல தலைவர் சந்திரன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். ஆகவே மாநில தலைவர் எல்.முருகன் ஒப்புதலுடன், கட்சியின் பொறுப்பில் இருநதும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுவதாக அதில் கறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேஙண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுவதாக கரு நாகராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளர்.