அரசியல்தமிழ்நாடு

கிங் மருத்துவமனை வளாகத்தில் “பன்னாட்டு தடுப்பூசி மைய கட்டடம்”… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை, கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கொரோனாவுக்கு பிந்தைய நோய்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நலவாழ் மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கிங் மருத்துவமனையில் பன்னாட்டு தடுப்பூசி மைய கட்டிடத்தையும் தொடங்கி வைத்து முதலமைச்சர் பார்வையிட்டார்.

வேலை நிமித்தமாகவும், படிப்பிற்காகவும் ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்கு செல்ல மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த ஏதுவாக மையம் திறப்பு பன்னாட்டு தடுப்பூசி மைய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்க மஞ்சள் காய்ச்சல் நோய் வரக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

பன்னாட்டு தடுப்பூசி மையத்திற்கு என இதுநாள் வரை தனி கட்டடம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது 50 லட்சம் செலாவில் கிண்டி கிங் ஆராய்ச்சி வளாகத்தில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கட்டடத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவர்களுக்கென அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர், கிங் மருத்துவமனை அருகே பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.