ஓடிடியில் வெளியாகும் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’?
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி ஆர்யா நடித்த ”சார்பட்டா பரம்பரை’ படம் ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது .
சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கேரக்டர்கள் அறிமுக வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின், டப்பிங் பணிகளும் முடிவடைந்த நிலையில், படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்தனர் . இந்நிலையில், ”சார்ப்பட்டா பரம்பரை” படத்தை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது .

