அமெரிக்க ரசிகர்களுடன் நடிகர் ரஜினி உற்சாக சந்திப்பு…
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அமெரிக்க வாழ் இந்தியர்களையும், ரசிகர்களையும் உற்சாகமாக சந்தித்தார்.
வழக்கமான பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 19 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள மயோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது, ரசிகர்கள் எடுத்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்துடன் தொலைபேசியில் பேசும்போது நலமுடன் இருப்பதாக கவிஞர் வைரமுத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா வாழ் இந்தியர்களையும், தனது ரசிகர்களையும் சந்தித்துள்ளார்.

வெஸ்ட் விர்ஜினியா நகரில் உள்ள ரசிகர்களை அவர் சந்தித்தார். ரசிகர்களின் தோளில் கை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர்களுடன் ரஜினிகாந்த் உரையாடினார். ரஜினியை சந்தித்து போட்டோ எடுத்த ரசிகர்கள், தங்களை அதிர்ஷ்டசாலிகள் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
