குற்றம்

நிர்வாணமாக மாணவிகளிடம் வீடியோ காலில் பேசிய சிவசங்கர் பாபா… யாஹூ இமெயில் கணக்கு முடக்கம்…

சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனராக இருந்து வந்த சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக முன்னாள் மாணவிகள் பலர் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டார். கடந்த 16 ஆம் தேதி டெல்லியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் சிவசங்கர் பாபாவை அழைத்து சென்ற சிபிசிஐடி போலீசார், சிவசங்கர் பாபாவின் அறை மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். சிவசங்கர் பாபா பல ஆணடுகளாக ஆபாசமாக சாட் செய்து, பயன்படுத்தி வந்த யாஹூ இமெயிலை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தபோது, பள்ளி மாணவிகளுக்கு ஆபாச சாட் செய்திருப்பது தெரியவந்தது.

சிவசங்கர் பாபா, அறையில் சில பெண்களுடன் ஆபாசமாக இருந்து கொண்டு, மாணவி ஒருவருடன் வீடியோ காலில் பேசியது தொடர்பான ஆதாரம் சிக்கியுள்ளது. இதையடுத்து சிவசங்கர் பாபாவின் யாஹூ இமெயிலை போலீசார் முடக்கினர். மேலும் சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப் டாப், பென் டிரைவ் உள்ளிட்டவைகளை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாருக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், மீண்டும் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.