ஃபேஷியல் ஸ்கேனர் மூலம் கொரோனா பரிசோதனை… ஒரு சில நிமிடங்களில் ரிசல்ட்…
ஒருவரின் முகத்தைக் ஸ்கேன் செய்து ஒரு சில நிமிடங்களில் அவருக்கு கொரோனா உள்ளதா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்கும் கருவி, அபுதாபியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் மூன்றாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. பல்வேறு முறைகள் மூலம் கொரோனா பாதிப்பு கண்டறியும் நிலையில், பரிசோதனையை எளிமையாக்கும் விதமாக அபுதாபியில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது பயன்படுத்தப்படும் ஃபேஷியல் ஸ்கேனரை அபுதாபியின் EDE ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இது மின்காந்த அலைகளை அளவிடுவதன் மூலம் துல்லியமான கோவிட் -19 நோய்த்தொற்றைக் கண்டறிகிறது, ஷாப்பிங் மால்களில் தற்போது இந்த கருவி மூலம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மால்களுக்கு வரும் வொடிக்கையாளர்கள், இந்த கருவியின் மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 90 சதவிகிதம் தொற்று உடையவர்களிடம் இருந்து மிக துல்லியமான முடிவுகள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஸ்கேனர்கள் மின்காந்த அலைகள் மூலம் செயல்படுவதாகவும், நமது உடலில வைரசின் புரத பொருளான ஆர்.என்.ஏ. இருப்பது தெரிந்தால், மின்காந்த அலையின் வீச்சில் மாற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ஒரு கருவியின் உதவியுடன் இந்த அப்ளிகேஷன் செய்லபடுகிறது. ஸ்மார்ட்போனில் உள்ள அப்ளிக்கேஷனை கொண்டு ஒருவரை ஸ்கேன் செய்யலாம் என்றும் ஒரு சில வினாடிகளில் முகத்தை ஸ்கேன் செய்து விடும் என்றும் கூறுகின்றனர்.

ஸ்மார்ட்போனில் உள்ள அப்ளிக்கேஷனை கொண்டு ஒருவரை ஸ்கேன் செய்யலாம் என்றும் ஒரு சில வினாடிகளில் முகத்தை ஸ்கேன் செய்து, சில நிமிடங்களில் தொற்று உள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. கொரோனா பாதிப்பு இல்லை என்றால் பச்சை நிறத்திலும், தொற்று இருந்தால் சிவப்பு நிறத்திலும் ஒளிரும். சிவப்பு நிறம் காட்டிய நபர்கள், 24 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர். பரிசோதனை எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.
