அடி தூள் ! 4 மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளிவரும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ !
கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார் .

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் 4 மொழிகளில் டாக்டரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு நிச்சய லாபத்தை தரக்கூடியவை . இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் பல முன்னணி நடிகர்களின் படங்களைப் போல சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் திரைப்படத்தையும் நேரடியாக ஓடிடியில் வெளியிட முன்வந்தனர்.
டாக்டர் படத்தின் ஓடிடி உரிமையுடன், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையையும் டிஸ்னி + ஹாட் ஸ்டார் நிறுவனம் கேட்டது. ஆனால், டாக்டரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி ஏற்கனவே வாங்கியிருந்தது. அவர்கள் டிஸ்னி + ஹாட் ஸ்டாருக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை தர மறுத்தனர். இதனால், டாக்டர் படத்தின் ஓடிடி வெளியீடு தள்ளிப் போனது.

கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்து, விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கான நிலை திரும்பியதை அடுத்து, டாக்டர் ஓடிடிக்குப் பதில் திரையரங்கில் வெளியாகும் என்றனர்.

இந்நிலையில் டிஸ்னி + ஹாட் ஸ்டார் டாக்டரை நேரடியாக தங்கள் தளத்தில் வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் படத்தை வெளியிடுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
