அட கடவுளே…! இந்த தடுப்பூசி போட்டால் இப்படி ஒரு பிரச்சனையா? கலக்கத்தில் இந்தியர்கள்…!
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள், ஐரோப்பியாவில் பயணம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து உயர்மட்ட அளவில் எடுத்து செல்வேன் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளர்.
ஐரோப்பிய நாடுகளில், பயணம் மேற்கொள்ள கிரீஸ் பாஸ் நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், கிரீன் பாஸ் சான்றிதழுடன் ஸ்பெயினில் இருந்து பிரான்சுக்கும், பிரான்சில் இருந்து இத்தாலிக்கும் சென்று வரலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஐரோப்பிய மருந்துகள் அமைப்பில், இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து வேக்ஸேவ்ரியா, அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஐரோப்பாவில் பயணம் செய்வதில் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆதார் பூனாவாலா, தனது டுவிட்டர் பக்கத்தில்,
கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட இந்தியர்கள் பலர் ஐரோப்பிய யூனியனுக்கு பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதை நான் உணர்கிறேன். நான் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறேன். இந்த விவகாரத்தை உயர் மட்ட அளவில் எடுத்துச் செல்வேன். இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன். இதற்கான தீர்வு பெற ஒழுங்குமுறை அமைப்பு அளவிலும் சம்பந்தப்பட்ட நாடுகளின் ராஜதந்திர அளவில் கொண்டு செல்லப்படும் என்று பதிவிட்டுள்ளார்.
