Uncategorized

“இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின்”… எனக்கூறி உறுதிமொழி எடுத்த அமைச்சர்கள்…

புதுச்சேரியில் 50 நாட்களுக்குப் பிறகு புதிய அமைச்சரவை, பதவியேற்றது. என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து மே 7 ஆம் தேதி ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றார். அமைச்சர்கள் தேர்வு செய்வதில் இவ்விரு கட்சிக்கும் இழுபறி நீடித்தது. அமைச்சரவை அமைப்பது குறித்து முடிவு எட்டப்பட்டபின்னர், நேற்று அமைச்சர்கள் பதவியேற்றனர்.

புதுச்சேரி அமைச்சரவையில் கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையான பெண் ஒருவர் அமைச்சராகியுள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு ரேணுகா அப்பாதுரை, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் கல்வி அமைச்சராக பணிபுரிந்தார். இந்த நிலையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திர பிரியங்கா அமைச்சராகியுள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்போது, இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆடசி பரப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. தற்போது, இந்திய ஒன்றிய அரசு என்ற வார்த்தை விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், புதுச்சேரி பதவியேற்பு பிரமாணத்தின்போது, இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.