சினிமா

“பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் உள்ள கேரளாவை உருவாக்குவோம்”… வரதட்சணைக்கு எதிராக நடிகர் மோகன்லால்…

பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம் என்று வரதட்சணைக்கு எதிராக நடிகர் மோகன்லால் குரல் கொடுத்துள்ளார்.

கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக விஸ்வமயா உள்பட 3 பெண்கள் உயிரிழந்தனர். 100 பவுன் நகை, ஏக்கர் நிலம், கார் என இத்தனைப் பொருட்கள் கொடுத்தும் விஸ்வமயா, கணவன் மற்றும் அவரது குடும்பத்தாரால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தார்.

விஸ்வமயா உயிரிழந்தது குறித்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விஸ்வமயா உயிரிழப்புக்குப் பிறகு, அடுத்தடுத்து 2 பெண்கள் வரதட்சணை காரணமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் வரதட்சணைக்கு எதிராக கேரளா முழுவதும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று இளம் பெண்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நடிகர் மோகன்லால் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஆராட்டு பட காட்சி ஒன்றை வெளியிட்டு, வரதட்சணை வேண்டாம் என்று சொல்லங்கள் எனவும், வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம் என்று கூறியுள்ளார். மேலும், வரதட்சணை வாங்குவது – கொடுப்பது தவறு என்று சொல்லுங்கள் எனவும், பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம் என்று அந்த வீடியோவில் நடிகர் மோகன் லால் கூறியுள்ளார்.