அரசியல்தமிழ்நாடு

தமிழக முதல்வருக்கு செல்ல பெயர் வைத்த அர்ஜுன் சம்பத் !

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘ஆலோசனைக்குழு தலைவர்’ என ஏன் அழைக்கக் கூடாது, என்று ஹிந்து மக்கள் கட்சி தலைவர்அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார் .

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :

சமீப காலமாக, மத்தியிலுள்ள பாஜக அரசை, ‘மத்திய அரசு’ என்று குறிப்பிடுவதை தவிர்த்து, ‘ஒன்றிய அரசு’ என்று, தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.’டிவி’ செய்தி வாசிப்பின்போதும் சில சேனல்கள் தவிர, மற்றவை ‘ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிடுகின்றன.

அதே போல், ஸ்டாலினை முதல்வர் என்று தான் அழைக்க வேண்டும் என்பது சட்டம் அல்ல; அவரை ஆலோசனைக் குழு தலைவர் என்றும் அழைக்கலாம். அவர் கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவின் தலைவர் தான். இறுதி முடிவு கவர்னரிடம் தான் உள்ளது. இதை நான் சொல்லவில்லை; இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு – 163 சொல்கிறது.

இனிமேல் சட்டப்படி, ‘ஆலோசனைக்குழு தலைவர் ஸ்டாலின் அவர்களே’ என அழைக்கலாம். ‘ஒன்றிய அரசு’ சரி என்று ஏற்றுக்கொள்பவர்கள், இதையும் ஏற்க வேண்டும். இவ்வாறு, அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.