குற்றம்

கள்ளக்காதலை கைவிடாத மகளை வெட்டிக் கொன்ற தந்தை… நெல்லையில் பரபரப்பு…

நெல்லை டவுனை அடுத்துள்ள கிருஷ்ணபேரி பகுதியைச் சேர்ந்த சேர்மத்துரை – இசக்கி கவிதா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சேர்மத்துரை கூலி வேலை செய்து வரும் நிலையில், அதே பகதியைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவருக்கும் இசக்கி கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

ராமசந்திரனுடனான உறவை கைவிடுமாறு சேர்மத்துறையும், கவிதாவின் தந்தையும் பல முறை கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இசக்கி கவிதாவும், ராமசந்திரனும், வீட்டை விட்டு ஓடிச் சென்று விட்டனர். நேற்று (24 ஜூன்) கவிதாவின் வீட்டிற்கு இருவரும் வந்துள்ளனர். அவர்கள் வீட்டிற்கு வந்தது குறித்து கவிதாவின் தந்தைக்கும் அவரது கணவர் சேர்மத்துறைக்கும், அவரது சகோதரருக்கும் தெரியவந்தது.

வீட்டுக்கு வந்த அவர்கள் கவிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த கவிதாவின் தந்தை, கையில் வைத்திருந்த ஆயுதத்தால், இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். தந்தையிடம் இருந்து கவிதாவும், ராமசந்திரனும் தப்பியோட முயன்றனர். அப்போது அவர்களை மூன்று பேருமாக சேர்ந்த வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு பேரையும் மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலன் இன்றி இசக்கியம்மாள் இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக இசக்கி கவிதாவின் கணவன் சேர்மத்துரையை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கவிதாவின் தந்தை மற்றும் சேர்மத்துரையின் தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் தந்தையே தனது மகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.