குற்றம்தமிழ்நாடு

நடிகை ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி… சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல்…

நடிகை நிவேதா பெத்துராஜ்-க்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி செத்துக் கிடந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலை உணவு துறை அதிகாரிகள் இழுத்து மூடினைர்.

ஒரு நாள் கூத்து தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், ஸ்விகி செயலி மூலம், சென்னை பெருங்குடியில் உள்ள மூன்லைட் உணவகம் ஒன்றில் உணவு ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதை புகைப்படம் எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது முதல் முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து, உணவு துறை அதிகாரிகள், மூன்லைட் உணவகத்தில் அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

அப்போது, பல நாட்களாக மசாலாவில் ஊறி கெட்டுப்போயிருந்த 10 0கலோ கோழி இறைச்சிகள், கெட்டுப்போன உணவுப் பொருட்களை அதிகாரிகள், குப்பைத் தொட்டியில் கொட்டினர். ஓட்டலில் குறைந்தபட்ச பராமரிப்பு கூட இல்லாமல் உணவு பொருட்களை வைத்திருந்ததால், பெருங்குடி மூன்லைட் ஓட்டலுக்கு உணவு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கரப்பான் பூச்சியுடன் இருந்த உணவை சப்ளை செய்த சுவிகி மீது தவறு இல்லை என்று கூறினாலும், தற்போது அதிக கட்டணம் பெற்று, அதாவது இரண்டு மடங்கு கட்டணம் வசூல் செய்வதாக சுவிகி நிறுவனம் மீது வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.