போலீஸ் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்… திமுக ஆட்சி என்பதை உணர்ந்து செயல்படுங்கள்… எம்.பி. கனிமொழி டுவிட்…
சாமானிய மக்கள் மீது காவல் துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், தருமபுரி எல்லைக்கு சென்று மது அருந்திவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். பாப்பநாயக்கன் பட்டி அருகே, சோதனை சாவடியில் இருந்த போலீசார், முருகேசன் வந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். சிறப்பு காவல் உதவியாளர் பெரியசாமி, முருகேசனிடம் விசாரித்துள்ளார். அப்போது முன்னுக்குப்பின் முரணாகவும், ஆபாசமாகவும் பேசியதால் முருகேசன் பேசியதால், சிறப்பு காவல் உதவியாளர் பெரியசாமி லத்தியைக் கொண்டு தாக்கியுள்ளார்.
இதில் மயங்கி விழுந்த முருகேசன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். முருகேசனின் உயிரிழப்பு குறித்தும், சிறப்பு காவல் உதவியாளர் பெரியசாமி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சிறப்பு காவல் ஆய்வாளர் பெரியசாமி மீது, உயிரிழந்த முருகேசனின் உறவினர்கள் புகார் அளித்தனர். எஸ்.ஐ. தாக்கியதால்தான் முருகேசன் உயிரிழந்தாக புகாரில் தெரிவித்திருந்தனர். அவர்களது புகாரைத் தொடர்ந்து சிறப்பு காவல் உதவியாளர் பெரியசாமியை, போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், சாமானிய மக்கள் மீது காவல் துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில், சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7-க்கு முன்பாக இருந்த மனோநிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்.
