மாட்டுச்சாணியைக் காணோம்…?! காவல் நிலையத்தில் புகார்…!
சத்தீஷ்கர் மாநிலத்தில் 800 0கலோ மாட்டுச்சாணம் காணவில்லை என அளித்த புகாரை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஷ்கர் மாநிலம், கோதான் நியாய யோஜனா திட்டத்தின்கீழ் மாநில அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது., ஒரு கிலோ 2 ரூபாய் மாட்டுச்சாணம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அரசின் அறிவிப்பை அடுத்து, கிராம மக்கள், மாட்டுச்சாணம் சேகரித்து வருகின்றனர். விவசாயிகள், பால் முகவர்கள், மாட்டுச்சந்தை வைத்திருப்பவர்கள் என அனைவரும் மாட்டுச்சாணத்தை கோதான் நியாய யோஜனா திட்டத்தின்கீழ் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோர்பா மாவட்டத்தில் துரனா கிராமத்தில் 800 கிலோ எடை கொண்ட மாட்டுச்சாணம் காணாமல் போயுள்ளதாக, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. துரனா கிராம சமிதியின் தலைவர் கம்ஹான் சிங் கன்வார், காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடுபோன மாட்டுச்சாணத்தின் மதிப்பு 1,600 ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
