இளம் பெண் கழுத்து அறுத்து கொலை… ஒருதலை காதலால் விபரீதம்… பொதுமக்கள் செய்த அசாத்திய காரியம்…
ஒரு தலைக் காதல் காரணமாக, இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞனுக்கு தர்ம அடி கொடுக்கப்பட்ட சம்பவம் ஆந்திவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பட்வேலு அருகே சிந்தலசெரு கிராமத்தை சேர்ந்தவர் சிரிஷா. இசென்னூர் கிராமத்தைச் சேர்ந்த சரண் என்ற இளைஞன், சிரிஷாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். இந்த நிலையில், சிரிஷாவின் சொந்த ஊருக்கு வந்த சரண், தான் கடைசியாக உன்னிடம் பேச வேண்டு அழைத்தள்ளார். பின்னர் தனியாக வந்த சிரிஷாவை, தான் மறைத்து வைத்ததிருந்த கத்தியால், கழுத்தை அழுத்துள்ளார்.
சிரிஷாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள், சரணை பிடித்து தர்ம அடி கொடுத்து, அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கழுத்தறுபட்டிருந்த சிரிஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்து சென்றனர். அங்கு ஏற்கனவே சிரிஷா உயிரிழந்ததாக கூறினர். இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த சரணை, போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்னறர்.
