இந்தியாகுற்றம்

காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 4 பேர் அதிரடியாக கைது… போலீசார் விசாரணை…

ஜார்கண்டில் உள்ள காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மேலாளர், வார்டன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர், டெல்கோ நகரில் அன்னை தெரேசா நல அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. அறக்கட்டளைக்கு சொந்தமான காப்பகத்தில் மேலாளராக ஹர்பல் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். ஹர்பல் சிங் என்பவர் மீது காப்பகத்தில் உள்ள சிறுமிகள், பாலியல் தொல்லை அளிப்பதாக காவல் துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை அடுத்து, ஜாம்ஷெட்பூர் நகர எஸ்.பி. தலைமையில், தெரேசா நல அறக்கட்டளை காப்பகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், கட்டாயப்படுத்தி சிறுமிகள் வேலை வாங்கியது போன்ற பல தீங்கான செயல்களில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, காப்பகத்தின் மேலாளர் ஹர்பல் சிங், அவரது மனைவி புஷ்பா திர்கி, வார்டன் கீதாதேவி உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். காப்பகம் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், இங்கு வசித்து வந்த சிறுமிகள் வேறு ஒரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த காப்பகத்தில் இருட்நத 2 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். தற்போது அவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.