சினிமா

அடி தூள்! விரைவில் வடிவேலுவின் இம்சை அரசன் 2 !

சிம்புத்தேவன் இயக்கத்தில் வைகை புயல் வடிவேல் நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் 2006-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது .

Imsai Arasan 24am Pulikecei tussle: Producers Council issues Vadivelu an  ultimatum - Movies News

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தொடங்கினர். படப்பிடிப்பு சில தினங்கள் நடந்த நிலையில் படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக படத்தில் இருந்து வடிவேல் விலகினார்.

படப்பிடிப்பில் இருந்து பாதியில் விலகியதால் வடிவேலிடம் நஷ்ட ஈடு கேட்டு படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் புகார் அளித்தார்.

Vadivelu and Shankar make up: Imsai Arasan 24th Pulikecei to go on floors  soon? - Movies News

இதையடுத்து வடிவேலுவை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவிதித்தது. இதனால் பல வருடங்களாக வடிவேல் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் வடிவேல், இயக்குனர் ஷங்கர் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தீர்க்க மீண்டும் சமரச பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளதாக தங்கள் வெளியாகியுள்ளன .

Vadivelu preps for Imsai Arasan 2- The New Indian Express

வடிவேல் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படலாம் என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.