உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணி அறிவிப்பு
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது .
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியில் விளையாடவுள்ள 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இந்திய அணி வீரர்களின் விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா , இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
