Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..! இன்றைய நிலவரம் இதோ !

இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :

தமிழகத்தில் இன்று 1,75,010 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் புதிதாக 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,97,864 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் மேலும் 210 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,548 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 22,720 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.