சினிமா

படப்பிடிப்பில் கலந்துகொள்ள காதலனுடன் தனி விமானத்தில் பறந்த நடிகை நயன்தாரா!

மலையாள பட படப்பிடிப்பிற்காக தனி விமானத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.

image

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா . இவர் தொடர்ச்சியாக தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது மலையாள படங்களிலும் ஆண்டுக்கு ஒன்று என்று நடித்து வருகிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ’லவ் ஆக்‌ஷன் ட்ராமா’ என்ற படத்தில் நடித்தவர், அடுத்ததாக சமீபத்தில் வெளியான ‘நிழல்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாவதற்கு முன்னரே நேரம், பிரேமம் பட புகழ் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக ’பாட்டு’ என்ற படத்தில் நடிப்பதாக கடந்த ஆண்டு இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

image

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் நயன்தாரா கொச்சின் சென்றடைந்துள்ளார். விக்னேஷ் சிவன் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், கொச்சினை சென்றடைந்த புகைப்படங்கள் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.