நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் – நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு
நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தாராளமாக அளிக்கலாம் என்று முன்னாள் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிவித்துள்ளது.
நீட் தேர்வினால் மாணவர்கள் எந்த மாதிரியான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை பற்றி முழுமையாக ஆராயவும் .அப்படி யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான மாற்று நடைமுறைகள் மற்றும் சட்டரீதியான வழிமுறைகள் ஆராயவும் ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் நீட் தேர்வினால் பாதிப்புகள் ஏதும் உள்ளதா என்பதை வரும் 23 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என அக்குழு தெரிவித்துள்ளது .
