அரசியல்தமிழ்நாடு

திமுக ஆட்சியில் கட்டுமான தொழில் முடக்கம்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்…

திமுக ஆட்சியில் மின்சாரம் எப்போது வரும், எப்போதும் போகும் என்பதே தெரியாது என்றும் அடிக்கடி மின்தடை நிலவுவது கண்டனத்திற்குரியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை, பட்டிணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சியில் இருந்தபோது மாநில உரிமைகள் பறிபோனது. தற்போதுள்ள முதலமைச்சர் மாநில உரிமைகளை நிலைநாட்டுவாரா என்பது சந்தேகமாக உள்ளது.

எங்கு சென்றாலும் தடுப்பூசி இல்லை என்ற நிலையே உள்ளது. தடுப்பூசிகளைப் பெறுவதற்கு தமிழக அரசு ஏன் முறையான முயற்சி எடுக்கவில்லை. தற்போது ஒரு கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது.

அதிமுக ஆட்சியில் எந்தவொரு நிலையையும் சமாளிக்கும் வகையிலான ஒரு நிலைமை இருந்தது. நிதிநிலைமையும், நல்ல நிர்வாகத்தையும் அளித்தார்கள். திமுக ஆட்சியில் எப்போது மின்சாரம், வரும் எப்போது போகும் என்பதே தெரியாத நிலை உள்ளது. இது கண்டனத்துக்குரியது. கட்டுமான தொழிலில் முடங்கியுள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.