தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,805 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 267 பேர் உயிரிழந்து உள்ளனர். 23,207 பேர் குணமடைந்து உள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு போடபட்டது இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 25 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருவது சற்று ஆறுதல் தருகிறது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது :
தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 70,961 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 11,805 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,78,298 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 6,727 பேர் ஆண்கள், 5,078 பேர் பெண்கள். இதன் மூலம், தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 13,92,357 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 9,85,903 ஆகவும் அதிகரித்து உள்ளது. 23,207 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,23,015 ஆக உயர்ந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
