மின் கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்…! மீண்டும் அவகாசம் வழங்க மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசிநாள் எனவும் மீண்டும் அவகாசம் வழங்கப்படாது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிபட தெரிவித்துள்ளார்.
சிறு, குறு தொழில்கள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின்சார கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், மே 31-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அதனை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக மின்சாரத்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் பெருந்தொற்று காலம் ஊரடங்கை கருத்தில் கொண்டு அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசிநாள் எனவும் மீண்டும் அவகாசம் வழங்கப்படாது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியாக தெரிவித்துள்ளார்.
