இந்தியா

ஆழ்துளைக் கிணறில் தவறி விழுந்த பச்சிளம் குழந்தை குழந்தை…! தீவிர மீட்புப் பணியில் பொதுமக்களும் காவலர்களும் !

இந்தியாவில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவம் நாடு முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்துகொன்டே வருகிறது.

ஆபத்தை அறியாமல் மக்களின் அலட்சியத்தால் உபயோகத்தில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் அப்படியே விடப்படுகின்றன. இதுபோன்ற கிணறுகளில் சிறு குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாய் உள்ளது .

இதுபோன்ற அலட்சிய சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என்பதற்காக மூடப்படாத கிணறுகள் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு பலமுறை அறிவித்தாலும் மக்கள் இதை கண்டுகொள்வதாக இல்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சுர்ஜித் உயிருடன் மீட்டு பெற்றொரிடம் சேர்க்கப்படுவான்- ராகுல் காந்தி  நம்பிக்கை || Rahul Gandhi prays TN Child Surjith traped in borewell to be  rescued alive

இந்நிலையில் மீண்டும் இது போன்ற சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் பதேகாபாத் மாவட்டம் தாரியாயி கிராமத்தில் நடந்துள்ளது.

அந்த கிராமத்தில் விவசாய நிலம் ஒன்றில் 150 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்துள்ளது. அதில் 5 வயது சிறுவன் இன்று காலை 8.30 மணியளவில் தவறிவிழுந்துள்ளான். அந்த சிறுவனின் தந்தை தோண்டிய கிணறு என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுதொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் அங்குள்ள ஊர்மக்களும் காவல்துறையினரும் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.