தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது ? விளக்கம் தந்த அமைச்சர் அன்பில் மகேஷ் !
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் கட்டுக்குள் வராததால் தற்போதைக்கு கல்வித் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பது பற்றி மட்டும் தான் ஆலோசனை செய்து வருகிறோம் என்றார் .

தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை கொரோனா காலகட்டத்தில் தொடங்கியுள்ளதால் மாணவர்கள் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் . மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு ஒரு வாரத்தில் பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார் .
