இந்தியா

“ரோசாப்பூ சின்ன ரோசாப்பு”… தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ரோஜா பூ…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அடிக்கடி கைகழுவ வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீர்வாக இருப்பது தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒன்றேயாகும். பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல் தனியார் அமைப்புகளும் அறிவுறுத்தி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் வகையில் தனியார் அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில், தன்னார்வ அமைப்பு சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் ரோஜா பூக்கள் வழங்கப்பட்டன. தடுப்பூசி மீதான அச்சத்தைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தன்னார்வ அமைப்பினர் தெரிவித்தனர்.