அரசியல்தமிழ்நாடு

கோவிட் தடுப்பூசி ! தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்…! அரசுக்கு ட்வீட் மூலம் கோரிக்கை வைத்த விஜயகாந்த்!

கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்றின் முதல் அலையை விட இரண்டுவது தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என தேமுதிக தலைவர் விஜியகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் கூறியதாவது :

“கொரோனா நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பல்வேறு முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்