இந்தியில் சிபிஐ அதிகாரியாக நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் ஸ்ரீசாந்த். இவர் சூதாட்டப் புகாரில் சிக்கியதை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். சில வருடங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அவருக்கான தடையை நீக்கியது.

இதையடுத்து தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்ரீசாந்த் விளையாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்தியில், அக்சர் 2, காபரே, மலையாளத்தில் டீம் 5, கன்னடத்தில் கெம்பே கவுடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீசாந்த், ’பட்டா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார்.

இப்படம் அரசியல் த்ரில்லர் என கூறப்படுகிறது ஸ்ரீசாந்த், சிபிஐ அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டருக்கு அவர்தான் சரியானவராக எனக்குத் தோன்றியது. கதையை கேட்டதும் கண்டிப்பாக நடிக்கிறேன் என்றார். இந்தக் கேரக்டரில் அவரால் சிறப்பாக நடிக்க முடியும் என்கிறார் இப்படத்தை இயக்கும் இயக்குநர் ராதாகிருஷ்ணன்.
இதையடுத்து கொரோனவினால் போடப்பட்டிருக்கும் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் படப்பிடிப்பை தொடங்கயிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
