கட்டுமான துறையை முடக்கிப்போட்ட திமுக… பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம்…
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. ஜல்லி, செங்கல், சிமெண்ட், கம்பி உள்ளிட்டவைகளின் விலை உயர்ந்துள்ளது. தமிழக அரசு விலை நிர்ணயக்குழுவை அமைக்க வேண்டும் என கட்டுமான பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த விலை உயர்வை அடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச் ராஜா, கட்டுமான பொருள் விலை உயர்வு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில், மே 2 அன்று சிமெண்ட் 1 மூட்டை 380. இன்று 520 திமுக என்றாலே சிமெண்ட் கார்ட்டல் கூட்டுக் கொள்ளை என்பது நிருபணம். 30 நாட்களில் மூட்டைக்கு 140 ரூபாய் விலையேற்றம். ஆனால் இதுதான் விடியலா என்று ஊடகங்கள் ஏன் விவாதிக்கவில்லை. மக்களை கொள்ளையடிக்கும் ஆட்சிக்கு துதிபாடுவதுதான் ஊடக தர்மமா? என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மற்றொரு டுவிட்டரில், மே 2-ம் தேதி இரும்பு டன் 63000 இன்று 74000. செங்கல் 5000 கல் 29000 இன்று 33000. மணல் யூனிட் 3000 இன்று 5000 கட்டுமானத் துறையை 30 நாட்களில் முடக்கிப் போட்ட ஆட்சி விடியலா? இல்லை வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய ஆட்சி. ஊடகங்களின் கள்ள மௌனம் அருவருக்கத்தக்கதாக உள்ளது என ஹெச் ராஜா பதிவிட்டுள்ளார்.
