இன்று வரை திருமணமாகாத 90 கிட்ஸ் கவனத்திற்கு! 28 மனைவிகள் முன் மாஸ்ஸாக 37-வது திருமணம் செய்த கெத்து தாத்தா…! வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!
நமக்கு முந்தைய நூற்றாண்டில் அதாவது மன்னர் ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறை போல் தற்போது ஒரு தாத்தா 28 மனைவிகளுக்கு முன் கெத்தாக 37-வது திருமணம் செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் மன்னர் ஆட்சி காலத்தில் நாட்டை ஆளும் ராஜாக்கள் தனது வம்சத்தை விரிவுப்படுத்த பல திருமணங்கள் செய்து கொண்டு அதிகமான வாரிசுகளை பெற்றெடுப்பார்கள். அதுப்போன்ற கதைகளை நாம் நிறைய படித்திருக்கிறோம் , கேள்விப்பட்டிருப்போம், ஆனால் அதுப்போன்ற சம்பவம் தற்போது இந்த நூற்றாண்டில் நடந்துள்ளது வீடியோ பதிவாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வயதான தாத்தா ஒருவர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணம் அவருக்கு 37-வது திருமணமாகும் , அதுவும் 28 மனைவிகளுக்கு முன் இந்த திருமணத்தை கெத்தாக நடத்தி உள்ளார்.இதில் ஆச்சிரியம் என்னவென்றால் அந்த 28 மனைவிகளும் திருமணம் முடிந்த பின் அந்த இளம்பெண்ணை உற்சாகமாக வரவேற்கிறன்றனர்.
இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தாத்தாவிற்கு 37-வது திருமணம் என்பதே அதிர்ச்சியாக இருக்கும் போது அவரது பதிவில் மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. ரூபின் சர்மா தனது பதிவில், தைரியமான மனிதர். 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில்” என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த இன்று வரை திருமணமாகாத பல 90 கிட்ஸ் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
