அரசியல்தமிழ்நாடு

ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு – ஈ.பி.எஸ்.க்கு எதிர்ப்பு… போஸ்டரால் அதிமுகவில் சலசலப்பு…

நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகதிகள். 2 சட்டமன்ற தொகுகளில் அதிமுக கூட்டணி, 3 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டள்ளன. மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்களால் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக அதில் அச்சிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எடப்படி பழனிசாமிதான் காரணம் என்றும், ஓ.பன்னீர்செல்வத்தை கலந்தாலோசிக்காமல் எந்த நடவடிக்கையும் எடப்பாடி பழனிசாமி செய்ய வேண்டாம் என்றும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை செய்யாததால்தான், சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்றதாக போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அவர்களை கலந்தாலோசிக்காமலேயே தேர்தலில் தோல்வியை சந்தித்ததாகவும், அவரை ஆலோசிக்காமல் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்றும் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்கள் போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளதற்கு, திமுக மற்றும் அமமுகவின் சதி என்று அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.